கோப்பாய் ஆசிரியர் கலாசாலையின் நூற்றாண்டை முன்னிட்டு சிநேகபூர்வ விளையாட்டுப் போட்டி


கோப்பாய் ஆசிரியர் கலாசாலையின் நூற்றாண்டை முன்னிட்டுக் கோப்பாய் ஆசிரியர் கலாசாலைக்கும் யாழ்ப்பாணம் தேசிய கல்வியியல் கல்லூரிக்கும் இடையிலான சிநேகபூர்வ விளையாட்டுப் போட்டி நிகழ்வு நாளை மறுதினம் செவ்வாய்க்கிழமை(27.06.2023) காலை-08.30 மணிக்கு கோப்பாய் ஆசிரியர்  கலாசாலை மைதானத்தில் ஆரம்பமாகி இடம்பெறவுள்ளது.

இரு கல்லூரிகளினதும் உடலாளர் மன்ற ஏற்பாட்டில் நடைபெறவுள்ள விளையாட்டுப் போட்டி நிகழ்வு கோப்பாய் ஆசிரியர் கலாசாலையின் அதிபர் ச.லலீசன், கோப்பாய் தேசிய கல்வியியல் கல்லூரியின் பீடாதிபதி சு.பரமானந்தம் ஆகியோரின் இணைத் தலைமையில் இடம்பெறவுள்ளது.

இந்த நிகழ்வில் புதிதாக நியமிக்கப்பட்டுள்ள யாழ்.வலயக் கல்விப் பணிப்பாளர் பொ.ரவிச்சந்திரன் பிரதம விருந்தினராகவும், ஓய்வுநிலை விரிவுரையாளர்களான கலாநிதி.செல்வி.நி.நல்லையா, திருமதி.ஜெ.தியாகலிங்கம் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகவும், லயன் டாக்டர் வை.தியாகராஜா கெளரவ விருந்தினராகவும் கலந்து கொள்ளவுள்ளனர்.