நலம் தரும் வேம்பு நூல் வெளியீடு வரும் 02.02.2026 திங்கட்கிழமை காலை 10 மணிக்கு சுன்னாகம் பொதுநூலகத்தில் இடம்பெறவுள்ளது.
வரவேற்புரையினையும், தலைமை உரையினையும் சமூக ஆர்வலரான சுந்தரமூர்த்தி புவனகுமார் அவர்களும் அறிமுக உரையினை ஓய்வுநிலை ஆங்கில மொழிக் கற்பித்தல் பேராசிரியர் ம. சரவணபவஐயர் ஆற்றுவார்கள்.
நூல் மதிப்பீட்டுரையினை எழுத்தாளரும், இயற்கை ஆர்வலருமான வடகோவை வரதராஜன் அவர்கள் நிகழ்த்தவுள்ளார்.
வேம்பின் வரலாறு மற்றும் பாரம்பரியம், தாவர பூச்சிக் கட்டுப்படுத்தியாக, உயிர் உரமாக, நிலையான மற்றும் மீளுருவாக்க விவசாயத்தில், மனித மற்றும் கால்நடை ஆரோக்கியத்தில் வேம்பின் பங்கு, வேம்பு பயிர்ச்செய்கை மற்றும் கிராமப்புற வாழ்வாதார மேம்பாடு, வேம்பிலிருந்து கிடைக்கும் ஆரோக்கிய உற்பத்திகள் மற்றும் புவி வெப்பமடைதலைக் குறைத்தல் மற்றும் கார்பன் கிரெடிட் (Carbon Credits) ஆகியவற்றில் வேம்பின் பங்கு தொடர்பில் குறித்த நூலில் பல்வேறு விடயங்களும் உள்ளடக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்நிகழ்வில் எழுத்தாளர்கள், ஆர்வலர்கள், பொதுமக்கள் அனைவரையும் பங்கேற்று பயனடையுமாறு ஏற்பாட்டாளர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்.

