யாழில் நாளை மின்தடைப்படும் பகுதிகள்

மின்சாரத் தொகுதிப் பராமரிப்பு, புனரமைப்பு மற்றும் கட்டுமானப் பணிகளுக்காக யாழ்.மாவட்டத்தின் சில பகுதிகளில் நாளை செவ்வாய்க்கிழமை(27.06.2023) காலை-08.30 மணி முதல் மாலை-05 மணி வரை யாழ்.மாவட்டத்தின் சில பகுதிகளில் மின்சாரம் தடைப்பட்டிருக்குமென இலங்கை மின்சாரசபை தெரிவித்துள்ளது.

இதன்படி, யாழ்.மண்டைதீவு, மண்டைதீவு கடற்படை முகாம், மண்கும்பான், மண்கும்பான் விடுதியடி, மண்கும்பான் நீர்ப்பாசன சபை, அல்லைப்பிட்டி, அல்லைப்பிட்டி தேவாலயத்தடி, பூம்புகார், வெண்புரவிநகர், மூளாய், கே.எம்.கே.கடல் உணவு (பிரைவேட்) லிமிட்டெட் ஆகிய பகுதிகளில் மின்சாரம் தடைப்பட்டிருக்குமெனவும் இலங்கை மின்சார சபை மேலும் குறிப்பிட்டுள்ளது.    

 (செ.ரவிசாந்)