அனைத்து முஸ்லிம் பாடசாலைகளுக்கும் விசேட விடுமுறை

நாளை மறுதினம் வியாழக்கிழமை(29.06.2023) கொண்டாடப்படவுள்ள ஹஜ் பெருநாளை முன்னிட்டு எதிர்வரும்-30 ஆம் திகதி வெள்ளிக்கிழமை நாட்டில் இயங்கி வரும் அனைத்து முஸ்லிம் பாடசாலைகளுக்கும் விடுமுறை வழங்கப்படவுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

குறித்த விடுமுறை தினத்துக்குப் பதிலாக அடுத்த மாதம்-08 ஆம் திகதி நாட்டில் அமைந்துள்ள அனைத்து முஸ்லிம் பாடசாலைகளும் இயங்கும் எனவும் கல்வி அமைச்சு மேலும் குறிப்பிட்டுள்ளது.