நல்லூரில் இலவச யோகக் கலைக் கற்கை நெறியின் புதிய பிரிவு ஆரம்பம்

வடக்கு மாகாணக் கல்வி அமைச்சின் இளைஞர் விவகார அலகினால் உடல், உள மேம்பாட்டிற்காக இலவசமாக நடாத்தப்பட்டு வருகின்ற இலவச யோகக்கலைக் கற்கை நெறியின் புதிய பிரிவு நல்லூர்க் கந்தசுவாமி ஆலயத்தின் பின் வீதியில் அமைந்துள்ள நல்லூர் மங்கையற்கரசி வித்தியாலயத்தில் ஆரம்பிக்கப்பட்டு இடம்பெற்று வருகிறது.  

அண்மையில் நடைபெற்ற யோகக் கலைக் கற்கை நெறியின் ஆரம்ப நிகழ்வில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மருத்துவபீட உளவளத் துணையாளர் திருமதி-சாவித்திரி ரவிச்சந்திரன் கலந்து கொண்டு 'யோகமும் வாழ்வும்' எனும் தலைப்பில் சிறப்புரையாற்றினார்.   


இதேவேளை, சனி, ஞாயிறு தினங்களிலும், அரச விடுமுறை தினங்களிலும் காலை-06 மணி முதல் காலை-08 மணி வரை இடம்பெறவுள்ள வகுப்புக்களில் ஆர்வமுள்ள ஆண்கள், பெண்கள் இருபாலாரும் வயது வேறுபாடின்றிக் கலந்து கொள்ள முடியும் என வடக்கு மாகாணக் கல்வி அமைச்சுத் தெரிவித்துள்ளது.