உடுவிலில் நாளை இரத்ததான முகாம் நிகழ்வு

உடுவில் மத்திய விளையாட்டுக் கழகத்தின் 25 ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு இரத்ததான முகாம் நிகழ்வு நாளை ஞாயிற்றுக்கிழமை(10.09.2023) காலை-09 மணி முதல் உடுவில் டச்சு வீதியில் அமைந்துள்ள வசி முன்பள்ளி மண்டபத்தில் இடம்பெறவுள்ளது.

இந்த இரத்ததான முகாம் நிகழ்வில் கழக அங்கத்தவர்கள், குருதிக் கொடையாளர்கள் மற்றும் ஆர்வலர்கள் அனைவரும் கலந்து கொண்டு உயிர் காக்கும் இரத்ததானப் பணிக்கு ஒத்துழைப்பு வழங்குமாறு இரத்ததான முகாம் நிகழ்வின் ஏற்பாட்டாளர்கள் கேட்டுள்ளனர்.