குப்பிழானில் அபிவிருத்தித் திட்டங்களை முன்னுரிமைப்படுத்தல் தொடர்பான கூட்டம்

வலிகாமம் தெற்குப் பிரதேச சபையின் ஆளுகைக்குட்பட்ட வட்டாரம்-04 இல் ஜே-210, ஜே-211 கிராம சேவகர் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் 2024 ஆம் ஆண்டு நடைமுறைப்படுத்தப்படவுள்ள அபிவிருத்தித் திட்டம் தொடர்பான முன்மொழிவுகளைத் தெரிவு செய்தல் மற்றும் செயற்படுத்தலைப் பொதுமக்களின் பூரண பங்கேற்புடன் செயற்படுத்தப்படவுள்ளது.

இதுதொடர்பில் வட்டாரத்திற்கு உட்பட்டதும், அவசியம் செய்ய வேண்டியதுமான அபிவிருத்தித் திட்டங்களை இனம் கண்டு முன்னுரிமைப்படுத்தல் தொடர்பான கூட்டம் நாளை வியாழக்கிழமை(07.09.2023) பிற்பகல்-02.30 மணியளவில் குப்பிழான் கன்னிமார் கோயிலுக்கு அருகில் அமைந்துள்ள ஜே-210 கிராம சேவகர் அலுவலகத்தில் இடம்பெறவுள்ளது.

மேற்படி இரு கூட்டங்களிலும் அனைத்துப் பொதுமக்களும் கலந்து கொண்டு தேவையான தகவல்களை வழங்கி அபிவிருத்தியில் பங்கேற்குமாறு வலிகாமம் தெற்குப் பிரதேச சபையின் செயலாளர் கேட்டுள்ளார்.                                  



 



.