கோண்டாவில் கிழக்கு ஶ்ரீ அற்புதநர்த்தன விநாயகர் சனசமூக நிலையத்தினதும் குமரன் விளையாட்டுக்கழகத்தினதும் உயர்த்தும் கரங்கள் செயற்திட்டத்தினூடாக லண்டன் குமரன் விளையாட்டுக்கழத்தின் பங்களிப்பினூடாக தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலைக்கு வைத்தியசாலைச் சமூகத்தினரின் வேண்டுகோளுக்கமைய அத்தியாவசிய மருந்துகள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன.
நேற்று முன்தினம் திங்கட்கிழமை(04.09.2023) காலை-10 மணியளவில் மேற்படி வைத்தியசாலையில் இடம்பெற்ற நிகழ்வில் ஒரு லட்சத்து ஐம்பதாயிரம் ரூபா பெறுமதியான மருந்துப் பொருட்கள் கோண்டாவில் கிழக்கு ஸ்ரீ அற்புதநர்த்தன விநாயகர் சனசமூக நிலைய நிர்வாகத்தினர் சார்பில் தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் வைத்தியர் எம்.எம்.றெமான்ஸிடம் சம்பிராதயபூர்வமாக கையளிக்கப்பட்டது.
(செ.ரவிசாந்)