2024 கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சையின் விடைத்தாள் திருத்தும் பணிகள் இறுதிக் கட்டத்தை அடைந்துள்ளதாகவும், பெறுபேறுகள் இந்த மாதம்-15 ஆம் திகதிக்கு முன்னர் வெளியிடப்படுமெனவும் இலங்கைப் பரீட்சைத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
கடந்த மார்ச் மாதம் இடம்பெற்ற கல்விப் பொதுத்தராதர சாதாரணதரப் பரீட்சையில் 478,182 பேர் தோற்றியிருந்தனர். இவர்களில் 398,182 பேர் பாடசாலைப் பரீட்சார்த்திகள் எனவும் பரீட்சைத் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.