தமிழ்மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் அம்பாறை மாவட்டப் பொறுப்பாளரும், முன்னாள் கிழக்கு மாகாணசபை உறுப்பினருமான இனியபாரதி எனப்படும் கே.புஸ்பகுமார் இன்று ஞாயிற்றுக்கிழமை (06.07.2025) குற்றப்புலனாய்வுப் பிரிவினரால் திருக்கோவிலில் வைத்துக் கைது செய்யப்பட்டுள்ளார்.
கிழக்குப் பல்கலைக்கழக முன்னாள் உபவேந்தர் பேராசிரியர். சுப்பிரமணியம் ரவீந்திரநாத் கடந்த 2006 டிசம்பர் மாதம்-15 ஆம் திகதி கொழும்பிலிருந்து மட்டக்களப்பு நோக்கி வாகனத்தில் பயணித்துக் கொண்டிருந்த நிலையில் கொழும்பில் வைத்துக் கடத்தப்பட்டுக் காணாமல் ஆக்கப்பட்டிருந்தார்.
இந்த வழக்குத் தொடர்பில் சி.சந்திரகாந்தனை (பிள்ளையான்) கடந்த ஏப்ரல் மாதம்-08 ஆம் திகதி கொழும்பு குற்றவிசாரணைப் பிரிவில் (சிஜடி) மட்டக்களப்பில் அமைந்துள்ள அவரது காரியாலயத்தில் வைத்துக் கைது செய்யப்பட்டுத் தற்போது தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளார். அவர் வழங்கிய வாக்குமூலத்தின் அடிப்படையிலேயே இனியபாரதி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.