தெல்லிப்பழை ஸ்ரீ துா்க்காதேவி ஆலயத்தின் முன்னாள் பெருந் தலைவர் சிவத்தமிழ்ச்செல்வி கலாநிதி. தங்கம்மா அப்பாக்குட்டியின் பதினேழாவது ஆண்டு குருபூசை வைபவம் ஆனிமாத விசாக நட்சத்திர நன்நாளான நாளை ஞாயிற்றுக்கிழமை (06.07.2025) காலை-09 மணி முதல் மேற்படி ஆலய அன்னபூரணி மண்டபத்தில் ஆலயத் தலைவர் செஞ்சொற்செல்வர் கலாநிதி.ஆறு.திருமுருகன் தலைமையில் நடைபெறவுள்ளது.
இந் நிகழ்வில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் பௌதீகத் துறைப் பேராசிாியா்.முருகதாஸ் தணிகைச்செல்வன் பிரதம விருந்தினராகவும், யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மருத்துவபீட உடலியங்கியல்துறை விாிவுரையாளா் மருத்துவர் பேரானந்தராஜா டினேசன் சிறப்பு விருந்தினராகவும் கலந்து கொள்ளவுள்ளனர். நிகழ்வில் மூன்று மூத்த சிவாச்சாரியார்கள் விருது வழங்கிக் கெளரவிக்கப்படவுள்ளனர்.