மாதகல் இளைஞர்களின் ஏற்பாட்டில் மாபெரும் மாட்டு வண்டில் சவாரிப் போட்டி-2025 ஞாயிற்றுக்கிழமை (06.07.2025) பிற்பகல்-02 மணியளவில் யாழ் மாதகல் சவாரித் திடலில் நடைபெறவுள்ளது.
போட்டியில் முதலாம் பரிசாகப் புதிய துவிச்சக்கர வண்டி மற்றும் பெறுமதி மிக்க பரிசில்கள் வழங்கப்படவுள்ளன. காளைகள் களமாடும் தமிழ்மக்களின் வீர விளையாட்டில் பங்குபெறவும், கண்டு மகிழவும் அனைவரையும் பங்கேற்குமாறு போட்டி ஏற்பாட்டாளர்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.