புதிய சித்திரத் தேர் வெள்ளோட்ட விழா

உடுப்பிட்டி பத்திரகாளி அம்பிகா சமேத சந்திரசேகர வீரபத்திரர் சுவாமி ஆலயத்தின் புதிய சித்திரத் தேர் வெள்ளோட்ட விழா இன்று திங்கட்கிழமை (07.07.2025) நண்பகல்-12 மணியளவில் நடைபெறவுள்ளது. புதிய சித்திரத் தேர் வெள்ளோட்டத்துக்கான பூர்வாங்கக் கிரியைகள் இன்று முற்பகல்-10.30 மணியளவில் ஆரம்பமாகும். 

அடியவர்கள் அனைவரும் வெள்ளோட்ட விழாவில் ஆசார சீலர்களாகக் கலந்து கொண்டு புதிய சித்திரத் தேரின் வடம்பிடித்து இறையருள் பெற்றுய்யுமாறு ஆலயத் தர்மகர்த்தா சபையினர் கேட்டுள்ளனர்.