சுகாதார அமைச்சின் ஏற்பாட்டில் இன்று திங்கட்கிழமை (07.07.2025) முதல் எதிர்வரும்-11 ஆம் திகதி வெள்ளிக்கிழமை வரை தேசிய விபத்துத் தடுப்பு வாரமாக நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.
நாட்டில் விபத்துக்களின் எண்ணிக்கையையும், அதனால் ஏற்படும் இறப்புக்கள் மற்றும் பாதிப்புக்களையும் குறைக்கும் நோக்கில் இந் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்கமைய, தேசிய விபத்துத் தடுப்பு வாரத்தினுள் நாடு முழுவதும் அமைந்துள்ள பல்வேறு நிறுவனங்கள் மற்றும் பாடசாலைகளில் விழிப்புணர்வுப் பிரசாரங்கள், பயிற்சித் திட்டங்கள் மற்றும் செயன்முறைகள் என்பன செயற்படுத்தப்படவுள்ளன.
இந்த வாரத்தில் அடிக்கடி விபத்துக்கள் நிகழும் இடங்களாக அடையாளம் காணப்பட்ட வீதிகள், பணியிடங்கள் மற்றும் நீரில் மூழ்குவதால் அடிக்கடி உயிரிழப்பு ஏற்படும் இடங்கள் தொடர்பில் விசேட கவனம் செலுத்தப்படுமென அறிவிக்கப்பட்டுள்ளது.