முன்னாள் சுன்னாகம் பல நோக்குக் கூட்டுறவுச் சங்கப் பொது முகாமையாளரும், குப்பிழான் வீரபத்திரர் ஆலய பரிபாலன சபைத் தலைவரும், குப்பிழான் விக்கினேஸ்வரா சனசமூக நிலைய முன்னாள் தலைவருமான நல்லதம்பி சிவலிங்கம் நேற்றுத் திங்கட்கிழமை (07.07.2025) தனது 84 ஆவது வயதில் காலமானார்.
யாழ்.குப்பிழான் வடக்கைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட அன்னாரின் இறுதிக் கிரியைகள் நாளை மறுதினம் வியாழக்கிழமை (10.07.2025) காலை-09 மணியளவில் வீரபத்திரர் கோவிலடி, குப்பிழான் வடக்கில் அமைந்துள்ள அவரது இல்லத்தில் இடம்பெறுமெனக் குடும்பத்தினர் அறிவித்துள்ளனர்.