இணுவிலில் அரங்க ஆற்றுகை

இணுவில் அறிவாலயத்தின் ஆதரவில் இணுவில் தமிழ்ச் சங்கம், இணுவில் கந்தசுவாமி கோயில் இளந்தொண்டர் சபை இணைந்து வழங்கும் இரு நாடகங்களின் நிகழ்வு நாளை  வியாழக்கிழமை (10.07.2025) மாலை-05.30 மணியளவில் இணுவில் அறிவாலய மண்டபத்தில் இடம்பெறவுள்ளது.  

இந் நிகழ்வில்  காத்தவராயன் சிந்துநடைக் கூத்து மற்றும் முட்டை சிறுவர் நாடகம் ஆகிய நாடகங்கள் மேடையேற்றப்படவுள்ளன. 

சமூகத்தை ஆற்றுப்படுத்தும் நிகழ்வாக இடம்பெறும் இந் நிகழ்வில் அனைவரையும் கலந்து கொள்ளுமாறு நிகழ்வின் ஏற்பாட்டாளர்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.