நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் தெரிவு செய்யப்பட்ட தபாலகங்களில் வாகன அபராதத் தொகையைச் செலுத்துவதற்கான வசதிகளை ஏற்படுத்துவதற்குத் தபால் திணைக்களம் தீர்மானித்துள்ளது.
தற்போது மேல் மாகாணத்தில் இரவு நேரத் தபாலகங்களில் அபராதப் பணத்தை செலுத்துவதற்கான வசதிகள் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்துள்ளது. இம் முயற்சி வெற்றியளித்ததையடுத்து ஏனைய மாகாணங்களிலும் இதே நடவடிக்கைகளை முன்னெடுத்துச் செல்வதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது.
இந் நிலையில் இம்மாத இறுதிக்கு முன்னதாக இதற்கான வசதிகள் ஏற்படுத்தப்படுமென தபால் திணைக்களம் தெரிவித்துள்ளது.