புலமைப்பரிசில் பரீட்சை மீள் பரிசீலனை விண்ணப்பங்கள் கோரல்

2023 ஆம் ஆண்டுக்கான ஐந்தாம் தரப் புலமைப்பரிசில் பரீட்சைக்கான மீள்பரிசீலனை விண்ணப்பங்களை இன்று செவ்வாய்க்கிழமை (13.02.2024) முதல் இணையம் ஊடாகச் சமர்ப்பிக்க முடியுமெனக் கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

கடந்த புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில் 06 தரத்திற்கு மாணவர்களை அனுமதிப்பதற்கான மேன்முறையீடுகளை இன்று முதல் எதிர்வரும் பெப்ரவரி மாதம்- 29 ஆம் திகதி வரை இணையம் ஊடாகச் சமர்ப்பிக்க முடியும். 

கல்வி அமைச்சின் www.moe.gov.lk என்ற உத்தியோகபூர்வ இணையத்தளத்திற்குப் பிரவேசித்து அதிகபட்சமாக மூன்று பாடசாலைகளுக்கான விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்க முடியுமெனவும்    கல்வி அமைச்சு மேலும் குறிப்பிட்டுள்ளது.