வடக்கு மாகாணக் கல்வி அமைச்சின் இளைஞர் விவகார அலகினால் உடல், உள மேம்பாட்டிற்காக இலவசமாக நடாத்தப்பட்டு வருகின்ற யோகக்கலைக் கற்கை நெறியின் புதிய பிரிவு நாளை சனிக்கிழமை (08.07.2024) நல்லூர்க் கந்தன் ஆலயத்தின் பின் வீதியில் அமைந்துள்ள நல்லூர் மங்கையற்கரசி வித்தியாலயத்தில் வைபவ ரீதியாக ஆரம்பமாகவுள்ளது.
இதனை முன்னிட்டு நிகழ்வில் நாளை காலை-06 மணி முதல் காலை-08 மணி வரை தியானம் பற்றிய சிறப்புச் சிந்தனை அமர்வை உளவளத் துணையாளர் நா.நவராஜ் நிகழ்த்தவுள்ளார்.