யாழ் வந்தடைந்தார் தென்னிந்தியாவின் பிரபல கர்நாடக இசைப் பாடகி


தென்னிந்தியாவின் பிரபல கர்நாடக இசைப் பாடகி கலைமாமணி நித்யஸ்ரீ மகாதேவன் இன்று திங்கட்கிழமை (10.06.2024) யாழ்.வருகை தந்துள்ளார்.

யாழ்ப்பாணம் அரியாலை நீர்நொச்சித்தாழ்வு ஸ்ரீ சித்திவிநாயகர் ஆலய மஹா கும்பாபிஷேகப் பெருவிழாவை முன்னிட்டு இன்று திங்கட்கிழமை இரவு-07 மணி முதல் மேற்படி ஆலய முன்றலில் தெய்வீக இன்னிசைக் கச்சேரி இடம்பெறவுள்ளது. இந் நிகழ்வில் பங்கேற்பதற்காகவே நித்யஸ்ரீ மகாதேவன் யாழ்.வருகை தந்துள்ளார். அவருடன் தென்னிந்திய இசைக் கலைஞர்கள் மூவரும் யாழ் வருகை தந்துள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.