இந்த வருடத்தின் இறுதியில் உரிய சட்ட வரைபுகளைத் தயாரித்து அடுத்தவருட முற்பகுதியில் பிற்போடப்படாத வகையில் மாகாண சபைத் தேர்தலை நடாத்துவோம். நாட்டின் சட்டப் புத்தகத்தில் உள்ளதை நடைமுறைப்படுத்துவோம் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
யாழ். பருத்தித்துறையில் இன்று திங்கட்கிழமை (10.06.2024) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
மாகாண சபைத் தேர்தலை நடாத்த முடியாத தலைவர்கள் எவ்வாறு 13 ஆவது திருத்தச் சட்டம் தொடர்பில் பேசுவார்கள்? வடமாகாணத்தில் மாத்திரமன்றி நாடாளாவிய ரீதியில் நல்லிணக்கத்தை ஏற்படுத்த வேண்டியது அவசியம்.
மாகாண சபைத் தேர்தலை நடாத்தியதன் பின்னர் படிப்படியாக மக்களின் நம்பிக்கையைப் பெற்று 13 ஆவது திருத்தச் சட்டத்தையும் நடைமுறைப்படுத்துவோம் எனவும் தெரிவித்தார். .