சண்டிலிப்பாயில் தொழில்நாடும் இளைஞர், யுவதிகளுக்கான மாபெரும் தொழிற்சந்தை

மனிதவேலை வாய்ப்புத் திணைக்களத்தினால் நடாத்தப்படும் மாபெரும் தொழிற்சந்தை நிகழ்வு நாளை  வியாழக்கிழமை (13.06.2024) காலை-09 மணி முதல் சண்டிலிப்பாய்ப் பிரதேச செயலகத்தில் இடம்பெறவுள்ளது.

குறித்த தொழிற்சந்தை நிகழ்வில் தனியார் நிறுவனங்கள் போன்ற பல்வேறு நிறுவனங்கள் பங்கேற்க உள்ளதாகவும், ஆர்வமுடையோர் பங்குபற்றிப் பயன்பெறுமாறும் நிகழ்வின் ஏற்பாட்டாளர்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.