யாழ்.மாவட்டத் திரிசாரணர் குழாமினால் நடாத்தப்படும் இரத்ததான முகாம் நிகழ்வு நாளை செவ்வாய்க்கிழமை (27.08.2024) காலை-09 மணி முதல் பிற்பகல்-02 மணி வரை யாழ். நல்லூர்க் கந்தசுவாமி ஆலயத்திற்கு அருகில் அமைந்துள்ள மயிலூரான் அரங்கத்தில் நடைபெறவுள்ளது.
இந்த உயிர் காக்கும் உன்னத இரத்ததானப் பணியில் அனைவரையும் கலந்து கொண்டு ஆதரவு வழங்குமாறு நிகழ்வின் ஏற்பாட்டாளர்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.