பொன்னாலை கண்ணபிரான் படிப்பகத்தின் சிரேஷ்ட ஆலோசகராகவிருந்து அமரத்துவமடைந்த பண்டிதர் ம.ந.கடம்பேசுவரன் ஐயாவின் முதலாம் ஆண்டு நினைவேந்தலும் படிப்பகத்தின் நூலகம் ஆரம்பிக்கும் நிகழ்வும் இன்று புதன்கிழமை (16.04.2025) மாலை-03.30 மணியளவில் கண்ணபிரான் படிப்பகத்தில் இடம்பெறவுள்ளது.
இந் நிகழ்வில் நூலக ஆர்வலர்களையும், அமரர்.கடம்பேசுவரன் ஐயாவின் இலக்கிய நண்பர்களையும் தவறாது கலந்து கொள்ளுமாறு நிகழ்வின் ஏற்பாட்டாளர்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.