வெளியாகிறது உயர்தரப் பரீட்சைப் பெறுபேறு!

கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகளை எதிர்வரும்-20 ஆம் திகதியின் பின்னர் வௌியிடுவதற்குத் தீர்மானித்துள்ளதாக இலங்கைப் பரீட்சைத் திணைக்களம் தெரிவித்துள்ளது. 

ஏப்ரல் மாதம்- 20 ஆம் திகதிக்கு முன்னர் பரீட்சைப் பெறுபேறுகளை வௌியிட ஏற்கனவே தீர்மானிக்கப்பட்டிருந்தது. எனினும்,  தற்போது காணப்படும் நடைமுறைச் சிக்கல்களுக்கு அமைய 20 ஆம் திகதியின் பின்னரே பரீட்சைப் பெறுபேறுகளை வௌியிட முடியுமென இலங்கைப் பரீட்சைத் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

இதேவேளை, விடைத்தாள் மதிப்பீடு நிறைவடைந்துள்ளதாகவும், எதிர்வரும் சில நாட்களில் பெறுபேறுகள் தயாரிக்கப்பட்டுச் சரி பார்க்கப்படுமெனவும் இலங்கைப் பரீட்சைத் திணைக்கள ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்தார்.