சந்நிதியான் ஆச்சிரமத்தில் தெய்வீக இசை நிகழ்வு

சந்நிதியான் ஆச்சிரம சைவகலை பண்பாட்டுப் பேரவையின் ஏற்பாட்டில் வாராந்த நிகழ்வு வெள்ளிக்கிழமை (11.04.2025) முற்பகல்-10.45 மணி முதல் தொண்டைமானாறு சந்நிதியான் ஆச்சிரம மண்டபத்தில் ஆச்சிரம முதல்வர் செ.மோகனதாஸ் சுவாமிகள் தலைமையில் நடைபெற்றது. 

திருவாடுதுறை ஆதின திருமுறைச்செல்வர் ந.பரமேஸ்வரன் குழுவினரின் தெய்வீக இசை நிகழ்வு நிகழ்வை அலங்கரித்தது. இந் நிகழ்வில் இசைக்கலாமணி நடேசு செல்வச்சந்திரன், ம.லோகேந்திரன், ஞானபோதன் ப.விக்னேஸ்வரன் ஆகியோர் அணி செய் கலைஞர்களாகப் பங்குபற்றினர்.