ஹாட்லியின் மைந்தர்களான வசீகரன், பிரதீபன் ஞாபகார்த்தமாக Hartleyites- 2010 ஏற்பாடு செய்து நடாத்தும் இரத்ததான முகாம் நிகழ்வு இன்று செவ்வாய்க்கிழமை (15.04.2025) காலை-09 மணி தொடக்கம் பிற்பகல்-01 மணி வரை பருத்தித்துறை ஆதார வைத்தியசாலை இரத்தவங்கிப் பிரிவு மண்டபத்தில் இடம்பெறவுள்ளது.
உயிர்காக்கும் குறித்த இரத்ததான முகாம் நிகழ்வில் குருதிக் கொடையாளர்கள் மற்றும் ஆர்வலர்கள் அனைவரையும் தவறாது கலந்து கொள்ளுமாறு நிகழ்வின் ஏற்பாட்டாளர்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.