கொரோனா காலத்தைப் போன்று எரிபொருள் விநியோகத்துக்கு மீண்டும் QR நடைமுறை அமுல்

 


நாட்டிலுள்ள அனைத்து எரிபொருள் நிரப்பு நிலையங்களிலும் QR குறியீட்டு (QR Code) முறைமையின் கீழ் எரிபொருள் விநியோகிக்கும் நடைமுறை இன்று (15) முதல் அமுலுக்கு வரும் என வலுசக்தி அமைச்சு அறிவித்துள்ளது.

எரிபொருள் விநியோகத்தை சீரமைத்து, வெளிப்படைத்தன்மையை உறுதி செய்வதற்காக இந்த QR முறைமை மீண்டும் நடைமுறைக்கு கொண்டு வரப்படுவதாக அமைச்சு தெரிவித்துள்ளது.

இதன் மூலம் எரிபொருள் விநியோக நடவடிக்கைகள் கண்காணிக்கப்படுவதோடு, முறைகேடுகள் மற்றும் அத்துமீறிய கையிருப்புகளை கட்டுப்படுத்த முடியும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதன்படி, வாகன உரிமையாளர்கள் தங்களது வாகனங்களை பதிவு செய்து பெற்ற QR குறியீட்டை பயன்படுத்தி மட்டுமே எரிபொருளை பெற முடியும். அனைத்து எரிபொருள் நிரப்பு நிலையங்களும் இந்த முறைமையை கட்டாயமாக பின்பற்ற வேண்டும் எனவும் அமைச்சு வலியுறுத்தியுள்ளது.

மேலும், QR முறைமையின் மூலம் எரிபொருள் விநியோகத்தை முறைப்படுத்தி, நாட்டில் எரிபொருள் விநியோகத்தை திறம்பட நிர்வகிக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன என வலுசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.

பொதுமக்கள் தங்களது வாகனங்களுக்கு உரிய QR பதிவு செய்யப்பட்டுள்ளதா என்பதை முன்கூட்டியே உறுதி செய்து கொள்ளுமாறும் அமைச்சு அறிவுறுத்தியுள்ளது.

வாராந்த பெற்றோல் விநியோகம் - 

• Buses – 60L

• Motorcycles – 5L

• Motor cars – 15L

• Vans – 40L

• Motor lorries – 200L

• Land vehicles – 25L

• Three-wheelers – 15L

• Special purpose vehicles – 40L