நல்லூரில் செல்லப்பா சுவாமிகளின் குருபூசை நிகழ்வு

நல்லூர்த் தேரடிச் சித்தர் செல்லப்பா சுவாமிகளின் மாதாந்தக் குருபூசை நிகழ்வு இன்று சனிக்கிழமை (18.04.2026) யாழ் நல்லூர்க் கந்தசுவாமி ஆலயத்துக்கு அருகிலுள்ள செல்லப்பா சுவாமிகளின் நினைவாலயத்தில் சைவப்பிரகாசப் பேரவையின் ஏற்பாட்டில் நடைபெறவுள்ளது. 

இன்று காலை அபிஷேகத்தைத் தொடர்ந்து காலை-09 மணி தொடக்கம் தெய்வீகத் திருமுறைப் பாடல்கள், நற்சிந்தனை ஓதுதல் என்பன நடைபெறும். முற்பகல்-11 மணியளவில் யாழ் தெல்லிப்பழை மகாஜனக் கல்லூரியின் உப அதிபரும், சைவப் புலவருமான க.கைலைநாதன் கலந்து கொண்டு ' சித்தர் பெருமை ' எனும் தலைப்பில் விசேட சொற்பொழிவு நிகழ்த்துவார்.