தெல்லிப்பழை யூனியன் கல்லூரி அதிபராகிப் பத்து ஆண்டுகள் நிறைவு!

யாழ்.தெல்லிப்பழை யூனியன் கல்லூரியின் அதிபர் தில்லையம்பலம் வரதன் மேற்படி கல்லூரியில் அதிபராகி கடந்த திங்கட்கிழமை (24.08.2026) 10 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளார்.

கடந்த ஒரு தசாப்த காலமாக தெல்லிப்பழை யூனியன் கல்லூரியின் வளர்ச்சியையும், முன்னேற்றத்தையும் நோக்காகக் கொண்டு பல்வேறு சவால்கள், நெருக்கடிகள் மற்றும் விமர்சனங்களுக்கு மத்தியில் திறம்படப் பணியாற்றிக் கல்லூரியை உயரிய நிலைக்கு இட்டுச் சென்றுள்ளார். இவரது தலைமைத்துவத்தின் கீழ் கல்வி, விளையாட்டு, இணைப் பாடவிதானச் செயற்பாடுகள், உட்கட்டமைப்பு மற்றும் பௌதிக வளங்கள் உள்ளிட்ட அனைத்துத் துறைகளிலும் பாரிய மாற்றங்களும் குறிப்பிடத்தக்க அபிவிருத்திகளும்  முன்னெடுக்கப்பட்டுள்ளன எனத் தெரிவிக்கப்படுகிறது.