பச்சை மயமான அலங்காரங்கள்: பறக்கும் பச்சை மயில் வாகனத்தில் நல்லூர்க் கந்தன் பவனி!

வரலாற்றுச் சிறப்பு மிக்க நல்லூர்க் கந்தசுவாமி ஆலய வருடாந்த மஹோற்சவத்தின் 12 ஆம் நாள் மாலைத் திருவிழா இன்று வெள்ளிக்கிழமை (28.08.2026) மாலை சிறப்பாக இடம்பெற்றது. 

வசந்தமண்டபப் பூசை வழிபாடுகள் இடம்பெற்றதைத் தொடர்ந்து சுவாமி உள் வீதி உலாவைத் தொடர்ந்து நல்லூர்க் கந்த வேற்பெருமான் பறக்கும் பச்சை மயில் வாகனத்திலும், வள்ளி- தெய்வயானை நாயகியர் தனித்தனியாகப் பச்சை மயில் வாகனத்திலும் பச்சை வர்ண அலங்காரத்துடன் வெளிவீதியில் பவனி வந்தார்.