கீரிமலையில் இன்று மாபெரும் இரத்ததான முகாம்

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை இரத்தவங்கியில் எற்பட்டுள்ள பாரிய இரத்தத் தட்டுப்பாட்டினைக் கருத்திற் கொண்டு விதையனைத்தும் விருட்சமே இளைஞரணியினர் நடாத்தும் மாபெரும் 50 ஆவது இரத்ததான முகாம் இன்று ஞாயிற்றுக்கிழமை (26.07.2026) காலை-09 மணி முதல் மாலை-03 மணி வரை கீரிமலை கருகம்பனை கலாசார மண்டபத்தில் இடம்பெறவுள்ளது.

இரத்தத் தேவையுடைய குருதிக் கொடையாளர்களுக்குப் போக்குவரத்து வசதிகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. எனவே, இதனைக் கருத்திற் கொண்டு அனைவரையும் குறித்த இரத்ததான முகாம் நிகழ்வில் பங்குபற்றி ஒத்துழைப்பு வழங்குமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.