நாளை மறுதினம் சனிக்கிழமை(31.12.2022) 30,000 க்கும் அதிகமான அரச பணியாளர்கள் ஓய்வு பெறவுள்ளனர்.
தற்போதைய அரசாங்கம் அரச சேவையிலிருந்து ஓய்வு பெறுபவர்களின் வயதெல்லையை 60 ஆக குறைத்துள்ளது. இந்த நிலையில் 2021 ஆம் ஆண்டு அரச சேவையிலிருந்து ஓய்வு பெறுபவர்களையும் உள்ளடக்கி வரலாற்றில் முதல் தடவையாக பெருமளவானோர் நாளை மறுதினம் ஓய்வு பெறவுள்ளனர்.
இந்த நிலையில் ஏற்படும் வெற்றிடங்களை நிரப்புவதற்காகப் பல வேலைத் திட்டங்கள் முன்னெடுக்கப்படுவதாக மாகாண சபை மற்றும் உள்ளூராட்சி இராஜாங்க அமைச்சர் ஜானக வக்கும்புர தெரிவித்துள்ளார்.
அதிகளவானோர் ஒரே தடவையில் ஓய்வுபெறவுள்ள போதிலும் அரச சேவையில் வீழ்ச்சி ஏற்படாது எனவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.