மயிலணிச் சிவன் திருவெம்பாவை விரத உற்சவம் ஆரம்பம்

'மயிலணிச் சிவன்' என அழைக்கப்படும் சுன்னாகம் மயிலணி திருக்குடவாயில் ஸ்ரீ விஸ்வநாத சுவாமி ஆலய திருவெம்பாவை விரத உற்சவம் நேற்றுப் புதன்கிழமை(28.12.2022) அதிகாலை-05.30 மணிக்கு விசேட அபிஷேகம், பூசையுடன் ஆரம்பமாகியது. 

இவ்வாலயத்தில் தொடர்ந்தும் பத்துத் தினங்கள் மேற்குறித்த நேரத்தில் அபிஷேகம், பூசையைத் தொடர்ந்து திருவிழாவும் நடைபெறும்.

(செய்தித் தொகுப்பு:- செ.ரவிசாந்)