ஜனவரி முதல் விமானப் பயணிகளுக்கு பதிவு அட்டை முறைமை அமுல்


எதிர்வரும் ஜனவரி முதலாம் திகதி முதல் இலங்கைக்குப் பிரவேசிக்கும் மற்றும் நாட்டிலிருந்து வெளியேறும் வெளிநாட்டவர்கள் மற்றும் இலங்கையர்கள், வருகை மற்றும் புறப்பாடு அட்டையை இணையத்தளத்தில் பூர்த்தி செய்வதற்கான வசதிகள் செய்யப்பட்டுள்ளன. 

பயணிகளுக்கு ஏற்படும் அசெளகரியங்களைத் தவிக்கும் வகையிலேயே இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது. 

குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத் தளமான www.immigration.gov.lk அல்லது eservices.immigration.gov.lk என்ற இணையத் தளத்திற்குச் செல்வதன் மூலம், புறப்படுவதற்கு அல்லது வருவதற்கு மூன்று நாட்களுக்கு முன்னர் உரிய அட்டையை நிரப்புவதற்கான வசதிகள் செய்யப்பட்டுள்ளதாக அரசாங்கத் தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.