அகில இலங்கை ரீதியில் நடாத்தப்படும் நுண்கலைப் போட்டிகளில் யாழ்.தெல்லிப்பழை யூனியன் கல்லூரியின் காவடி நடனம் முதலாம் இடத்தைப் பெற்றுத் தங்கப் பதக்கத்தினைச் சுவீகரித்துச் சாதனை படைத்துள்ளது.
இன்று புதன்கிழமை(28.12.2022) அனுராதபுரத்தில் இடம்பெற்ற போட்டியில் மேற்படி கல்லூரியின் மாணவர்கள் இந்தச் சாதனையை நிலைநாட்டியுள்ளனர்.
இதேவேளை, குறித்த சாதனையை நிலைநாட்டிய மாணவர்களுக்கும், அவர்களுக்கு உறுதுணையாக நின்ற ஆசிரியர்களுக்கும் வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.
(செய்தித் தொகுப்பு:- செ.ரவிசாந்)