யாழில் போதைக்கு அடிமையான மேலும் ஒரு இளைஞனுக்கு ஏற்பட்ட துயரம்!யாழில் போதைப் பழக்கத்திற்கு அடிமையான மேலும் ஒரு இளைஞன் இன்று புதன்கிழமை(28.12.2022) உயிரிழந்துள்ளார். 

திருநெல்வேலி தலங்காவில் பிள்ளையார் கோவில் பகுதியைச் சேர்ந்த 25 வயதான இளைஞர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

அதிகளவான ஹெரோயின் பாவனையே குறித்த இளைஞனின் உயிரிழப்பிற்கான காரணம் எனத் தெரியவருகிறது. 

இதேவேளை, யாழ். மாவட்டத்தில் போதைப்பொருள் பாவனையால் அண்மைக் காலத்தில் பதிவான 15 ஆவது மரணம் இது என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.

(செய்தித் தொகுப்பு:- செ.ரவிசாந்)