ஜனவரி முதலாம் திகதி முதல் வாகனங்களைப் புதிதாகப் பதிவு செய்தல் மற்றும் வாகன உரிம மாற்றத்தின் போது வாகன இலக்கத் தகட்டில் உள்ள மாகாணக் குறியீடுகள் அகற்றப்படும் என மோட்டார் வாகனப் போக்குவரத்து ஆணையாளர் நாயகம் நிசாந்த வீரசிங்க தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று வெள்ளிக்கிழமை(30.12.2022) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவித்த போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.