சனி, ஞாயிறு தினங்களில் மின் துண்டிப்பு இல்லை!


நாளை சனிக்கிழமையும்(31.12.2022),  நாளை மறுதினம் ஞாயிற்றுக்கிழமையும்(01.01.2022) மின்துண்டிப்பு மேற்கொள்ளப்பட மாட்டாது என இலங்கைப் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

எனினும், எதிர்வரும் திங்கட்கிழமை(02) நாடளாவிய ரீதியில் 2 மணித்தியாலங்களும் 20 நிமிடங்களும் மின்துண்டிப்பு அமுலாக்கப்படவுள்ளதாகவும் இலங்கைப் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு மேலும் குறிப்பிட்டுள்ளது.