யாழ்.மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் ம.பிரதீபன் மாவட்டப் பதில் அரசாங்க அதிபராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
கடந்த- 17.02.2020 முதல் 31.12.2022 வரை மாவட்ட மக்களுக்குச் சேவை ஆற்றிய கணபதிப்பிள்ளை மகேசன் 01.01.2023 தொடக்கம் விளையாட்டுத் துறை மற்றும் இளைஞர் விவகார
அமைச்சின் செயலாளராக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவால் நியமிக்கப்பட்டுள்ள நிலையிலேயே பிரதீபன் பதில் அரசாங்க அதிபராக நியமிக்கப்பட்டுள்ளார்.
புதிய அரசாங்க அதிபர் ஒருவர் நியமிக்கப்படும் வரை பதில் அரசாங்க அதிபராக இவர் கடமை ஆற்ற உள்ளமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.
(செய்தித் தொகுப்பு:- செ..ரவிசாந்)