மின் கட்டணத் திருத்தம் தொடர்பான யோசனை அமைச்சரவைக்கு!

 


2023 ஆம் ஆண்டில் நடைமுறைப்படுத்த உத்தேசிக்கப்பட்டுள்ள மின் கட்டணத் திருத்தம் தொடர்பான யோசனை புத்தாண்டின் பின்னரான எதிர்வரும் அமைச்சரவைக் கூட்டத்தில் முன்வைக்கப்பட உள்ளது.

உத்தேச மின் கட்டணத் திருத்தங்களுக்கு அமைவாகத் தற்போது 0 முதல் 30 அலகுகளுக்காக 08 ரூபாவாக இருந்த கட்டணம் 30 ரூபாவாகவும்,  120 ரூபாவாக இருந்த நிலையான கட்டணம்  400 ரூபாவாகவும் அதிகரிக்கப்பட உள்ளது.

31 முதல் 60 அலகுகளுக்காக 10 ரூபாவாக இருந்த  கட்டணத்தை 37 ரூபாவாகவும், 240 ரூபா நிலையான கட்டணத்தை 550 ரூபாவாகவும் அதிகரிக்கப் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

91 முதல் 120 அலகு வரையான மற்றும் 121 முதல் 180 அலகு வரையான கட்டண அதிகரிப்பு மேற்கொள்ளப்பட மாட்டாதென்பதுடன்இதற்காக 960 ரூபாவாக இருந்த நிலையான கட்டணம் 1500 ரூபாவாக அதிகரிக்கப்பட உள்ளது.

181 அலகிற்கு மேல் பயன்படுத்தும் வாடிக்கையாளர்களுக்கு 75 ரூபாவாக இருந்த அலகொன்றுக்கான கட்டணத்தில் மாற்றமில்லை என்பதுடன், 1500 ரூபா நிலையான கட்டணம் 2000 ரூபாவாக அதிகரிக்கப்பட உள்ளது.

மத வழிபாட்டுத்தலங்கள் உள்ளிட்ட முக்கிய இடங்களுக்கு 0 முதல் 30 அலகு வரையில், அலகொன்றுக்கான கட்டணம் 8 ரூபாவிலிருந்து 30 ரூபா வரை அதிகரிக்கப்பட உள்ளது. 

மின்சாரக் கட்டணம் மேலும் அதிகரிக்கப்பட்டால் நாட்டின் தொழில்துறைகளில் கடுமையான பாதிப்புக்கள் ஏற்படக்கூடும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது.

இதேவேளை, தற்போதைய நிலையில் மின்சாரக் கட்டணத்தை அதிகரிக்க வேண்டிய தேவையில்லை எனப் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.