சந்நிதியான் ஆச்சிரமத்தில் நாளை நாவலர் பெருமானின் 200 ஆவது ஆண்டு விழா


சந்நிதியான் ஆச்சிரம சைவகலை பண்பாட்டுப் பேரவையின் ஏற்பாட்டில் சைவத்தின் காவலர் ஸ்ரீலஸ்ரீ ஆறுமுகநாவலர் பெருமானின் 200 ஆவது ஆண்டு நிறைவு விழாவும் நாவலரின் நூல்களின் கண்காட்சியும், நாவலர் நினைவு மலர் வெளியீடும் நாளை ஞாயிற்றுக்கிழமை(01.01.2022) காலை-09 மணியளவில் தொண்டைமானாறு சந்நிதியான் ஆச்சிரம மண்டபத்தில் ஓய்வுநிலை அதிபர் ஆ.சிவநாதன் தலைமையில் நடைபெற உள்ளது.

நிகழ்வில் கோப்பாய் ஆசிரியர் பயிற்சிக் கலாசாலையின் விரிவுரையாளர் வேல் நந்தகுமார் நாவலரின் தமிழ்ப்பணி எனும் தலைப்பிலும், வலிகாமம் வலய ஆசிரிய வளவாளர் சைவப்புலவர் ச.முகுந்தன் நாவலரின் சமயப் பணி எனும் தலைப்பிலும், வவுனியா தேசியக் கல்வியியற்              கல்லூரியின் விரிவுரையாளர் வே.ஞானசம்பந்தன் நாவலரின் சமூகப் பணி எனும் தலைப்பிலும் சொற்பொழிவுகள் ஆற்ற உள்ளனர்.

அத்துடன் அறநெறிப் பாடசாலை மாணவர்களின் கலைநிகழ்வுகள், வில்லுப்பாட்டு, பண்ணிசை உள்ளிட்ட நிகழ்வுகளும் இடம்பெறும்.

(செய்தித் தொகுப்பு:- செ.ரவிசாந்)