ஈழத்துச் சித்தர் குடையிற் சுவாமிகளின் மாதாந்தக் குருபூசை நிகழ்வு நாளை செவ்வாய்க்கிழமை(03.01.2023) கோண்டாவில் கிழக்கு ஸ்ரீ அற்புதநர்த்தன விநாயகர் ஆலய வளாகத்தில் அமைந்துள்ள குடையிற் சுவாமிகளின் சமாதி ஆலயத்தில் நடைபெற உள்ளது.
காலை-08.30 மணியளவில் கூட்டுப் பிரார்த்தனை ஆரம்பமாகும். தொடர்ந்து முற்பகல்-11 மணியளவில் குருபூசை நிகழ்வுகள் இடம்பெற்று அதனைத் தொடர்ந்து நண்பகல் விசேட அன்னதானமும் இடம்பெறும் என மேற்படி ஆலய நிர்வாகசபைத் தலைவர் தெரிவித்தார்.
(செய்தித் தொகுப்பு:- செ.ரவிசாந்)