வாதரவத்தை கேதுவுப் பிள்ளையார் ஆலயத்தில் தினமும் அன்னதானம்


யாழ்.வாதரவத்தை கேதுவுப் பிள்ளையார் ஆலயத்தில் திருவெம்பாவை விரத காலப் பகுதியை முன்னிட்டு மேற்படி ஆலய நிர்வாக சபையினரால் தினமும் நண்பகல் முதல் அடியவர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டு வருகிறது.

குறித்த அன்னதான நிகழ்வில் தினமும் வாதரவத்தைக் கிராமம் மற்றும் அயற்பகுதிகளைச் சேர்ந்த மக்கள் பலரும் கலந்து கொண்டு பயன்பெற்று வருகின்றனர்.

இதேவேளை, அண்மையில் நிறைவுக்கு வந்த பிள்ளையார் பெருங்கதை விரதத்தை முன்னிட்டும் இவ்வாலயத்தில் தினமும்  மக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டிருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.


(செய்தித் தொகுப்பு:- செ.ரவிசாந்)