தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனின் கொழும்பில் அமைந்துள்ள இல்லத்திற்கு இன்று புதன்கிழமை (04.01.2023) மாலை விஜயம் செய்த முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச இரா.சம்பந்தனைச் சந்தித்துக் கலந்துரையாடி உள்ளார்.
இதன்போது மகிந்த ராஜபக்ச சம்பந்தனுக்குப் பொன்னாடை போர்த்திக் கௌரவித்தார்.
இரா.சம்பந்தன் நாட்டிற்காக ஆற்றிய சேவைக்காக அவரைக் கௌரவித்ததாக முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் ஊடகப் பிரிவு தெரிவித்தது.
இதேவேளை, 75 ஆவது சுதந்திர தினத்திற்கு முன்னர் தேசியப் பிரச்சினையை நிவர்த்திப்பதற்கான இணக்கப்பாட்டை எட்டுவதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ள விடயத்திற்குப் பொதுஜன பெரமுன உள்ளிட்டோர் முழுமையான ஆதரவை வழங்க வேண்டும் என இதன்போது இரா.சம்பந்தன் மஹிந்த ராஜபக்சவிடம் கோரியுள்ளார்.