தெல்லிப்பழை வீணாக்கடவை காசிவிநாயகருக்குத் தேர்த் திருவிழா

தெல்லிப்பழை வீணாக்கடவை காசி விநாயகர் ஆலய வருடாந்த மஹோற்சவத்தின் தேர்த் திருவிழா நாளை செவ்வாய்க்கிழமை (22.04.2025) காலை-09.30 மணியளவில் சிறப்பாக இடம்பெறவுள்ளது. 

நாளை மறுதினம் புதன்கிழமை(23.04.2025) முற்பகல்-10 மணியளவில் தீர்த்தத் திருவிழாவும், அன்றையதினம் மாலை-06 மணியளவில் கொடியிறக்க உற்சவமும் இடம்பெறுமென ஆலய அறங்காவலர் தெரிவித்துள்ளார்.