பரிசுத்த பாப்பரசர் மறைவு

பரிசுத்த பாப்பரசர் பிரான்சிஸ் இன்று தனது 88 ஆவது வயதில் காலமானதாக வத்திக்கான் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.

12 வருடங்களாக அவர் பரிசுத்த பாப்பரசராக சேவையாற்றிய அவர் நிமோனியாத் தொற்றுக் காரணமாக கடந்த பெப்ரவரி மாதம் ரோமிலுள்ள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் பின்னர் குணமடைந்தார். இந் நிலையிலேயே இன்று காலமானதாக அறிவிக்கப்பட்டுள்ளது.