பாடசாலைகள் மீள ஆரம்பம்!

அரச மற்றும் அரச அனுசரணை பெற்ற தனியார் பாடசாலைகளில் முதலாம் தவணைக் கற்றல் செயற்பாடுகளின் மூன்றாம் கட்டம் இன்று திங்கட்கிழமை (21.04.2025) ஆரம்பமானது.

கடந்த- 12 ஆம் திகதி பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டது. இந் நிலையில் இன்று ஆரம்பமான முதலாம் தவணையின் மூன்றாம் கட்டக் கற்றல் செயற்பாடுகள் எதிர்வரும் மே மாதம்-09 ஆம் திகதி நிறைவடையவுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.