இன்று ஞாயிற்றுக்கிழமை(20.04.2025) இணுவில் மஞ்சத்தடி முருகன் ஆலய வருடாந்த மஹோற்சவத்தின் தேர்த் திருவிழா சிறப்பாக இடம்பெற்றது.
இதன்போது கூட்ட நெரிசலைப் பயன்படுத்தி அடியவர்களின் சுமார் நான்கு பவுண் தங்க நகைகள் திருடப்பட்டுள்ளன. இதுதொடர்பில் கோப்பாய்ப் பொலிஸாருக்குத் தகவல் வழங்கப்பட்ட நிலையில் பொலிஸார் துரிதமாகச் செயற்பட்டுச் சம்பவத்துடன் தொடர்புடைய நால்வரையும் அதிரடியாகக் கைது செய்துள்ளனர்.
குறித்த சம்பவம் தொடர்பில் மட்டக்களப்பைச் சேர்ந்த பெண் வேடமணிந்து வந்த ஆண் உள்ளிட்ட இரண்டு ஆண்களும், இரண்டு பெண்களும் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதுடன் கைதான நால்வரிடமும் தீவிர விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.