யாழ்.இந்துக் கல்லூரி மாணவன் படைத்துள்ள சாதனை!

நுவரெலியா பூண்டுலோயாவினைச் சேர்ந்த யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி மாணவன் ச. அபிசேக்தேவர் இன்று சனிக்கிழமை(26.04.2025) வெளியாகியுள்ள 2024 கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சைப் பெறுபேற்றின் அடிப்படையில் 3 ஏ சித்தியினைப் பெற்றுப் பொறியியல் பிரிவிற்குத் தெரிவு செய்யப்பட்டுள்ளார். 

அந்தவகையில் இவர் மாவட்ட நிலை- 5, தேசிய நிலை- 60 என்ற அடிப்படையிலும் சித்தி பெற்றுள்ளார். 

மலையகம், கிழக்கு மாகாணம் மற்றும் வன்னிப் பிராந்தியத்தில் விஞ்ஞானப் பிரிவில் கல்வி கற்க வாய்ப்பில்லாத மாணவர்களுக்கு யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியில் கல்வி கற்கும் வாய்ப்பு 2021 ஆம் ஆண்டு முதல் வழங்கப்பட்டு வருகின்றது. இந்தச் சந்தர்ப்பத்தினூடாகவே குறித்த மாணவன் உயர்தரத்தில் கல்வி கற்று உயர்தரப் பரீட்சையில் உயர்பெறுபேறுகளைப் பெற்றுக் கல்லூரிச் சமூகத்திற்கும், தான் பிறந்த மண்ணுக்கும் பெருமை சேர்த்துள்ளார். 

குறித்த மாணவனை நாங்களும் மனதார வாழ்த்துவோம்.